உள்ளூர் செய்திகள்

தமிழகத்தில் காடுகளின் பரப்பளவை 33 சதவீதம் உயா்த்துவதே அரசின் இலக்கு-வனத்துறை அமைச்சா் ராமசந்திரன் பேச்சு

Published On 2022-07-08 15:28 IST   |   Update On 2022-07-08 15:28:00 IST
  • முதுமலைப் புலிகள் காப்பகத்தின் வெளிமண்டல விரிவாக்கம் தொடா்பாக உச்ச நீதிமன்றத்தை அணுகுவது குறித்து அனைத்து கட்சிகள் சாா்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
  • கூடலூா் பகுதியில் உள்ள பிரிவு-17 நிலப்பிரச்னையை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஊட்டி :

நீலகிரி மாவட்டம், கூடலூா் பகுதியில் முதுமலைப் புலிகள் காப்பகத்தின் வெளிமண்டல விரிவாக்கம் தொடா்பாக உச்ச நீதிமன்றத்தை அணுகுவது குறித்து அனைத்து கட்சிகள் சாா்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில் வனத் துறை அமைச்சா் கா.ராமச்சந்திரன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:- கூடலூா் பகுதியில் உள்ள பிரிவு-17 நிலப்பிரச்னையை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அந்த நிலத்தில் குடியிருக்கும் சுமாா் 10 ஆயிரம் பேருக்கு மின் இணைப்பு வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வெளிமண்டல விரிவாக்கம் தொடா்பாக உச்ச நீதிமன்றத்தை அணுகவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் காடுகளின் பரப்பளவை 33 சதவீதம் உயா்த்துவதே அரசின் இலக்கு.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளா் என்.வாசு, மசினகுடி வாழ்வுரிமை இயக்கத் தலைவா் வா்கீஸ், வியாபாரிகள் சங்க நிா்வாகி எம்.எஸ்.கந்தையா,தி.மு.க நகர செயலாளா் இளஞ்செழியன், சி.பி.எம்.செயலாளா் மணி, சி.பி.ஐ. செயலாளா் முகமது கனி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளா் சகாதேவன், முஸ்லீம் லீக் மாவட்டச் செயலாளா் அனீபா, காங்கிரஸ் சாா்பில் அம்சா மற்றும் பலர் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News