10 புதிய வழித்தடங்களில் அரசு பஸ் சேவையை அமைச்சர் இ.பெரியசாமி தொடங்கி வைத்தார். அருகில் கலெக்டர் விசாகன் உள்பட பலர் உள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 10 புதிய வழித்தடத்தில் அரசு பஸ் சேவை அமைச்சர் இ.பெரியசாமி தொடங்கி வைத்தார்
- பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புதிய வழித்தடங்களில் பஸ்கள் இயக்கம் மற்றும் வழி நீட்டிப்பு செய்யப்பட்டு பஸ்கள் இயக்கம் என 10 பேருந்து சேவைகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
- கூட்டுறவுத்து றை அமைச்சர் இ.பெரியசாமி பஸ் சேவையை தொடங்கி வைத்தார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு புதிய வழித்தடத்தில் பஸ்கள் இயக்கம் தொடக்க விழா, வழித்தடப் பஸ்கள் நீட்டிப்பு மற்றும் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கான கூடுதல் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா ரெட்டியார்சத்திரத்தில் மாவட்ட கலெக்டர் விசாகன் தலைமையில் நடைபெற்றது. வேலுச்சாமி எம்.பி முன்னிலை வகித்தார்.
விழாவில் கூட்டுறவுத்து றை அமைச்சர் இ.பெரியசாமி பஸ் சேவையை தொடங்கி வைத்து பேசியதாவது:-
திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 25 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புதிய வழித்தடங்களில் பஸ்கள் இயக்கம் மற்றும் வழி நீட்டிப்பு செய்யப்பட்டு பஸ்கள் இயக்கம் என 10 பேருந்து சேவைகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, புதிய வழித்தடப் பஸ்கள் விவரம், திண்டுக்கல்-– ஒட்டன்சத்திரம் (வழி -ரெட்டியார்சத்திரம், எல்ல ப்பட்டி, கட்டசின்னன்பட்டி, காமாட்சிபுரம், நரிப்பட்டி, பலகனூத்து, திருமலைராயபுரம், மூலச்சத்திரம்), திண்டுக்கல்-கன்னிவாடி(வழி-அம்மாபட்டி, மேலப்பட்டிபிரிவு, நடுப்பட்டி, மாங்கரை, புதுப்பட்டி), திண்டுக்கல்-செட்டியப்பட்டி (வழி-பேம்பூர், தோமையார்புரம் பைபாஸ்), செம்பட்டி- – வத்தலகுண்டு(வழி-சித்தையன்கோட்டை, சித்த ரேவு, அய்யம்பாளையம், பட்டிவீரன்பட்டி), ஒட்டன்சத்திரம்-திண்டுக்கல் (வழி-மூலச்சத்திரம், திருமலை ராயபுரம், பலகனூத்து, நரிப்பட்டி, காமாட்சிபுரம், கட்டசின்னன்பட்டி, எல்லபட்டி, ரெட்டியார்சத்திரம்) ஆகிய புதிய வழித்தடங்களில் பஸ்கள் இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
வழித்தடம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள பேருந்து வழித்தடங்கள் விவரம், வத்தலகுண்டு –செம்பட்டி(வழி-பட்டிவீரன்பட்டி, அய்யம்பா ளையம், சித்தரேவு, சித்தையன்கோட்டை, ஆத்தூர்), திண்டுக்கல் – எஸ்.காமாட்சிபுரம்(வழி-வாணிவிலாஸ், கொட்டப்பட்டி), வேடசந்தூர் – திண்டுக்கல் (வழி-சீத்தமரம் நால்ரோடு, கரட்டுப்பட்டி, ரெட்டியார்சத்திரம், முத்தனம்பட்டி, பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரி) ஆகிய வழித்தடங்களில் பஸ்கள் இயக்கம் நீட்டிப்பு இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
மேலும், கன்னிவாடி – திண்டுக்கல் (தொடுதல் வழி-திப்பம்பட்டி, கசவனம்பட்டி, வெல்லம்பட்டி, கோனூர், குஞ்சனம்பட்டி, புளியராஜக்காப்பட்டி, குட்டத்துப்பட்டி) மற்றும் பூத்தாம்பட்டி-திண்டுக்கல் (தொடுதல் வழி-தாடிக்கொம்பு, மாவட்ட நீதிமன்றம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம்) ஆகிய பகுதிகளுக்கு பஸ்கள் சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
ஆத்தூர்் சட்டமன்ற தொகுதிக்கான சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் ஆத்தூர் செயல்பட்டு வருகிறது. தற்போது, ரெட்டியார்சத்திரத்தில் கூடுதலாக ஒரு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பா ன மனுக்களை இந்த அலு வலகத்தில் அளிக்கலாம். அந்த மனுக்களை அரசு அலுவலர்கள் பெற்று சம்பந்தப்பட்ட அலுவலர்க ளுக்கு அனுப்பி தகுந்த நடவடிக்கை மேற்கொ ள்வார்கள். பொது மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் உள்ளாட்சி பிரதிநிதிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
இந்த சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு நானும் அடிக்கடி வந்து, பொதுமக்களின் கோரிக்கைகளை நிறை வேற்ற உறுதிதுணையாக இருப்பேன் என பேசினார்.