உள்ளூர் செய்திகள்
அரசு பஸ் கண்டக்டரை செருப்பால் அடித்த பெண் கைது
- பஸ்சில் லக்கேஜ்க்கு தனியாக டிக்கட் எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
- வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த சரோஜா செருப்பால் கோவிந்தராஜை அடித்துள்ளார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியை செண்டவர் கோவிந்தராஜ்(வயது 48). இவர் அரசு பஸ் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று கோவிந்தராஜ் கிருஷ்ணகிரியில் இருந்து ஜெகதேரி செல்லும் டவுன் பஸ்ஸில் பணியில் இருந்தார். அப்போது சரோஜா என்ற பெண்ணும், மற்றொரு பெயர் தெரியாது ஆணும் பஸ்ஸில் ஏறியுள்ளனர்.
அவர்கள் லக்கேஜ் கொண்டு வந்துள்ளனர். அதற்கு தனியாக டிக்கட் எடுக்கவேண்டும் என்று கோவிந்தராஜ் கூறியுள்ளார். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த சரோஜா செருப்பால் கோவிந்தராஜை அடித்துள்ளார். அவருடன் வந்தவரும் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கோவிந்தராஜ் தந்த புகாரின் பேரில் சரோஜாவை கைது செய்த போலீசார் அவருடன் வந்தவரை தேடி வருகின்றனர்.