உள்ளூர் செய்திகள்

நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி பேசினார். அருகில் செந்தில்குமார் எம்.எல்.ஏ. உள்பட பலர் உள்ளனர்.

கொடைக்கானலில் அரசு ஆண்கள் கலைக்கல்லூரி விரைவில் தொடங்கப்படும் - அமைச்சர் பொன்முடி தகவல்

Published On 2023-09-01 05:16 GMT   |   Update On 2023-09-01 05:16 GMT
  • கொடைக்கானல் அட்டுவம்பட்டி அன்னை தெரசா மகளிர் பல்கலை க்கழகத்தில் பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது
  • உயர்கல்வி த்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார் . மேலும் அப்பகுதியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டார்.

கொடைக்கானல்:

கொடைக்கானல் அட்டுவம்பட்டி அன்னை தெரசா மகளிர் பல்கலை க்கழகத்தில் பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது . இவ்விழாவில் உயர்கல்வி த்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார் . மேலும் அப்பகுதியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டார். மாணவி களுடன் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்தார்.

பெண்கள் அரசு கலைக்க ல்லூரியில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளது. கல்லூரி விரிவுரை யாளர்கள் குறைகளையும் கேட்டறிந்தார். நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளதாக கூறிய மாணவிகளை மிகவும் உற்சாகத்துடன் பாராட்டினார்.

தமிழ்நாட்டில் இரு மொழி கல்வியே தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும். கொடைக்கானலில் பெண்களுக்கு மட்டுமே கல்லூரி, பல்கலைக்கழகம் உள்ளது. பழனி எம்.எல்.ஏ. செந்தில்குமாரின் வேண்டுகோளை ஏற்று விரைவில் ஆண்கள் அரசு கலைக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தங்கும் விடுதி கட்டிட ங்களும் விரிவுபடுத்தப்படும் எனவும் அதற்கான ஆய்வு பணி உடனே தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றார். இதில் செந்தில் குமார் எம்.எல்.ஏ., கொடைக்கானல் நகர்மன்ற தலைவர் செல்லத்துரை, நகர்மன்ற துணைத் தலைவர் மாயக்கண்ணன், முன்னாள் நகர் மன்ற தலைவர் முகமது இப்ராஹிம் மற்றும் தி.மு.க. முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News