உள்ளூர் செய்திகள்

ஒசூரில் பணிமனை சுற்றுசுவர் இடிந்து விழுந்ததில் சரக்கு வேன் சேதம்- பிரகாஷ் எம்.எல்.ஏ-மேயர் சத்யா நேரில் ஆய்வு

Published On 2022-08-30 15:25 IST   |   Update On 2022-08-30 15:25:00 IST
  • இடிபாடுகளை உடனடியாக சரிசெய்ய மாநகர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
  • வாகன உரிமையாளர் ரமேஷ் என்பவருக்கு ஆறுதல் கூறி மாநகராட்சி சார்பில் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக மேயர் சத்யா உறுதியளித்தார்.

ஓசூர்,

ஒசூர் மாநகராட்சி, 23-வது வார்டுக்குட்பட்ட பழைய ஏ.எஸ்.டி.சி.ஹட்கோ பகுதியில் தொடர் மழையால் அரசு போக்குவரத்து பணி மனையின் காம்பவுண்டு இடிந்து விழுந்தது.

இதில் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வேன் முழுமையாக சேதமடைந்தது. இந்த நிலையில் ஓசூர் எம்.எல்.ஏ.ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மேயர் சத்யா ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து இடிபாடுகளை உடனடியாக சரிசெய்ய மாநகர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

மேலும், வாகன உரிமையாளர் ரமேஷ் என்பவருக்கு ஆறுதல் கூறி மாநகராட்சி சார்பில் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக மேயர் சத்யா உறுதியளித்தார்.

Tags:    

Similar News