உள்ளூர் செய்திகள்

போலீஸ் எனக்கூறி ஆட்டு வியாபாரியை காரில் கடத்தி ரூ.25 லட்சத்தை பறித்த மர்ம நபர்கள்

Published On 2023-08-28 09:32 GMT   |   Update On 2023-08-28 09:32 GMT
  • சரவ–ணன் வைத்திருந்த பையில் இருந்த ரூ.25 லட்ச ரொக்க பணத்தை பறித்து கொண்ட அந்த கும்பல் அவரை உத்தனப்பள்ளி அருகே உள்ள அகரம் என்ற கிராமத்தில் இறக்கி விட்டுதப்பி சென்றுள்ள–னர்.
  • போலீசார் அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஓசூர்,

திருப்பத்தூர் மாவட்டம், புலியனேரி பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது47). இவர் ஆட்டு வியாபாரி.

தொழிலில் நஷ்டம்

மகாராஷ்டிரா உள்பட வடமாநிலங்களில் ஆடு–களை மொத்தமாக கொள்–முதல் செய்யும் இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு வாரசந்தைகள் மற்றும் இறைச்சி கடைகளில் ஆடு–களை சில்லறை விலைக்கு விற்பனை செய்வதை தொழிலாக கொண்டு உள்ளார்.

கடந்த 20 ஆண்டு–களாக ஆடு வியாபாரம் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் நேற்று கிருஷ்ணகிரி அடுத்துள்ள காவேரிப் பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆடுகளை விற்ற 13 நபர்களிடம் சுமார் 25 லட்ச ரூபாயை இவர் வசூல் செய்துள்ளார்.

காரில் கடத்தல்

அதன் பின்னர் அங்கிருந்து பஸ் மூலம் ஓசூர் பத்தலப்பள்ளி என்ற இடத்திற்கு வந்த அவர், பத்தலப்பள்ளியில் ஆடுகளை விற்றவர்களிடம் பணத்தை வசூலிப்பதற்காக நடந்து சென்றார்.

அப்போது, அந்தப் பகுதியில் நம்பர் பிளேட் இல்லாத வெள்ளை நிற மாருதி காரில் வந்த 4 பேர் சரவணனை மடக்கி பிடித்து, தங்களை போலீ–சார் எனக்கூறி கஞ்சா விற்பனை செய்கிறாயா? உன்னிடம் விசாரிக்க வேண்டும்? என கூறி குண்டு கட்டாக காரில் ஏற்றி கடத்தி சென்றனர்.

இதனையடுத்து சரவ–ணன் வைத்திருந்த பையில் இருந்த ரூ.25 லட்ச ரொக்க பணத்தை பறித்து கொண்ட அந்த கும்பல் அவரை உத்தனப்பள்ளி அருகே உள்ள அகரம் என்ற கிராமத்தில் இறக்கி விட்டு காரில் தப்பி சென்றுள்ள–னர். அப்போது தான் தன்னை போலீசார் அழைத்து செல்ல வில்லை, மர்ம நபர்கள் கடத்தி சென்றுள்ள–னர் என சரவணனுக்கு தெரிய வந்துள்ளது.

போலீசில் புகார்

இதனையடுத்து அங்கிருந்து ஓசூர் வந்த சரவணன் இந்த கடத்தல் மற்றும் பணம் பறிப்பு சம்பவம் குறித்து ஓசூர் அட்கோ காவல் நிலை–யத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் போலீசார் அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கைப்பற்றி சரவணனை கடத்தி பணம் பறித்த மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஓசூர் பகுதியில் பட்டப் பகலில் ஆட்டு வியா பாரியை போலீசார் எனக்கூறி மர்ம நபர்கள் குண்டு கட்டாக காரில் கடத்தி 25 லட்ச ரூபாய் பணத்தை பறித்து சென்ற சம்பவம் பெரும் பரப–ரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News