கோ கோ, கைப்பந்து போட்டிகள்: கிருஷ்ணகிரி, ஓசூர் அரசு பள்ளி மாணவிகள் சாதனை
- அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதலிடம் பெற்று தங்கம் வென்றுள்ளனர்.
- 2 பள்ளி மாணவிகளையும் கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி பாராட்டினார்.
கிருஷ்ணகிரி,
உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள் ஜூன் 3-ந் தேதி முதல் 8-ந் தேதி வரையில் நடைபெற்றது. தேசிய இளைஞர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை சார்பில் நடந்த போட்டியில் கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கோ கோ பிரிவில் முதலிடம் பெற்று தங்கம் வென்றுள்ளனர்.
கைப்பந்து பிரிவில் ஓசூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதலிடம் பெற்று தங்கம் வென்றுள்ளனர். இந்த 2 பள்ளி மாணவிகளையும் கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி நேற்று பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பிரபாகர், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மகேந்திரன், ஓசூர் அரசு மகளிர் பள்ளிதலைமை ஆசிரியர் லதா, பயிற்சி அளித்த ஆசிரியர்கள் மாணிக்கம், திவ்யலட்சுமி, மகாலட்சுமி, அசினா பேகம், ஓசூர் பள்ளி உடற்கல்வி ஆசிரியை முருகேஸ்வரி, கைப்பந்து பயிற்சியாளர் மாணிக்கவாசகம் ஆகியோர் உடன் இருந்தனர்.