நெடுகுளா கிராமத்தில் மரபியல் பல்வகைமை கண்காட்சி
- மூலிகை தாவரங்கள், வாசனை திரவியங்கள், மற்றும் கெய்மலர்கள், காட்சிப்படுத்தப்பட்டிருந்து.
- 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வட்டார தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் மூலம் 3-வது மரபியல் பல்வகைமை கண்காட்சி நெடுகுளா கிராமத்தில் நடைபெற்றது. கண்காட்சியை நீலகிரி மாவட்ட தோட்டக்கலை இணை இயக்குனர் கருப்புசாமி தொடங்கி வைத்தார். தோட்டக்கலை உதவி இயக்குனர் ஐஸ்வர்யா வரவேற்றார். மலை மாவட்ட சிறு விவசாயிகள் தலைவர் போஜன் வாழ்த்துரை வழங்கினார். இதில் காய்கறிகள், பயிர்கள், மூலிகை தாவரங்கள், வாசனை திரவியங்கள், மற்றும் கெய்மலர்கள், காட்சிப்படுத்தப்பட்டிருந்து. மேலும் வேளாண்மை அறிவியல் நிலையம், ஆராய்ச்சி நிலையம் செம்மறி ஆடு, இனவிருத்தி ஆராய்ச்சி நிலையம், மத்திய நீர் மற்றும் மண்வள ஆராய்ச்சி நிலையம், தமிழக ஊரக புத்தக திட்டம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் இருந்து பாரம்பரிய மருத்துவப் பயிர்கள், திணை, வரகு கம்பு, சாமை ஆகியவை விவசாயிகளுக்கு காட்சிப்படுத்தப்பட்டு விழிப்புணர்வு மேற்கொள்ளப் பட்டது. கண்காட்சியில் வேளாண்மை அறிவியல் நிலைய முனைவர் மாணிக்கவாசகம், செம்மறி ஆடு இனவிருத்தி ஆராய்ச்சி நிலைய தலைவர் பிரேமா, கோதுமை ஆராய்ச்சி நிலைய நஞ்சுண்டன், நீலகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் அபிஷேக் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் நெடுகுளா சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். கூடலூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் விஜயலட்சுமி நன்றி கூறினார்.