உள்ளூர் செய்திகள்

குப்பைகளை ஏற்றிச்செல்லும் மின்கல சுமை தூக்கும் வாகனத்தை வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. வழங்கிய போது எடுத்த படம்.

11 ஊராட்சிகளுக்கு குப்பைகளை ஏற்றிச்செல்லும் மின்கல சுமை தூக்கும் வாகனம்: வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. வழங்கினார்

Published On 2023-06-27 12:43 IST   |   Update On 2023-06-27 12:43:00 IST
  • குப்பைகளை ஏற்றிச்செல்லும் மின்கல சுமை தூக்கும் வாகனங்கள் வழங்கும் விழா நடை பெற்றது.
  • கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாள ருமான வசந்தம் கார்த்தி கேயன் கலந்து கொண்டார்.

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட் டம் சங்கராபுரம் வட்டம் ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 11 கிராம ஊராட்சிகளுக்கு தலா ரூ.2½ லட்சம் மதிப்பில் குப்பைகளை ஏற்றிச்செல் லும் மின்கல சுமை தூக்கும் வாகனங்கள் வழங்கும் விழா நடை பெற்றது. ஒன்றி யக்குழு தலைவர் வடிவுக் கரசி சாமி சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். துணை தலைவர் சென்னம் மாள் அண்ணாதுரை, வட்டார வளர்ச்சி அலு வலர்கள் ரங்கராஜன், பன்னீர்செல்வம், ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், துரைமுருகன், பாரதி தாசன் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ.வும், கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாள ருமான வசந்தம் கார்த்தி கேயன் கலந்து கொண்டு மேலப்பழங்கூர், பாக்கம், கடம்பூர் உள்ளிட்ட 11 ஊராட்சி மன்ற தலைவர் களிடம் மின்கல சுமை தூக்கும் வாகனங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சி யில் ஊராட்சி மன்ற தலை வர்கள், ஒன்றிய கவுன் சிலர்கள் மற்றும் அலுவலர் கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News