உள்ளூர் செய்திகள்

திட்டக்குடி அருகே மோட்டார் சைக்கிள்களை குறிவைத்து திருடும் கும்பல் :போலீசார் மடக்கி பிடித்தனர்

Published On 2023-08-30 09:09 GMT   |   Update On 2023-08-30 09:09 GMT
  • தேசிய நெடுஞ்சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
  • முன்னுக்குபின் முரணாக கூறியதால் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

கடலூர்: 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ராமநத்தம் மற்றும் இதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக விலையுயர்ந்த மோட்டார் சைக்கிள்கள் திருடு போய்வந்தது. இதனால் அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளை குறிவைத்து திருடும் கும்பலை பிடிக்க திட்டக்குடி போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் இன்று காலை திட்டக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையிலான போலீசார் திட்டக்குடி அருகே சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது இந்த சர்வீஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் லாட்ஜ் அருகே சந்தேகத்திற்கு இடமாக கும்பல் ஒன்று நின்று கொண்டிருந்தது. இதை பார்த்த போலீசார் அங்கு சென்று அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் முன்னுக்குபின் முரணாக கூறியதால் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அவர்கள் திட்டக்குடி மா.புடையூர் பகுதியை சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் ராஜகோபால் (வயது 24), போத்திரமங்கலம் முத்தழகன் மகன் ராஜா (20), பெரம்பலூர் மாவட்டம் அகரம் சீகூர் பகுதியை சேர்ந்த அசோக்குமார் மகன் வசந்தகுமார் (20), திருமாந்துறை அண்ணாநகர் வீரமுத்து மகன் அன்பரசன் (20) என்பது தெரியவந்தது.

மேலும் ராமநத்தம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் மோட்டார் சைக்கிள்களை திருடி செல்வதை ஒப்பு க்கொண்டனர். இவர்கள் இரவு, பகல் நேரத்தில் கூட சாலை மற்றும் வீட்டின் அருகே நின்று கொண்டிருக்கும் மோ ட்டார் சைக்கிள்களை கள்ள ச்சாவி பயன்படுத்தியும், மோட்டார் சைக்கிளில் போடப்ப ட்டுள்ள லாக்கை உடைத்தும் இந்த திருட்டில் ஈடுபட்டு வந்தது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் மோட்டார் சைக்கிள்களை குறிவைத்து திருடும் கும்பலான ராஜகோபால், ராஜா, வசந்தகுமார். அன்பரசன் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து தொடர்ந்து வேறுபகுதியில் இந்த மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு உள்ளனாரா என விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்து 3 விலையுயர்ந்த மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News