உள்ளூர் செய்திகள்

சேதப்படுத்தப்பட்டுள்ள முனீஸ்வரர் சிலையை படத்தில் காணலாம்.

வத்தலக்குண்டுவில் நள்ளிரவில் சுவாமி சிலையை சேதப்படுத்திய கும்பல்

Published On 2023-03-14 11:27 IST   |   Update On 2023-03-14 11:27:00 IST
  • முனீஸ்வரர் சிலையை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.
  • இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

வத்தலக்குண்டு:

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருணா ச்சலபுரத்தில் செல்வவிநாயகர் கோவில் உள்ளது. மெயின் ரோட்டில் உள்ள பிரசித்தி பெற்ற இந்த விநாயகர் கோவிலில் கடந்த 3-ந் தேதி கும்பாபி ஷேகம் நடைபெற்றது. அடிக்கடி இப்பகுதியில் விபத்துகள் நடந்து வருவதால் கும்பாபிஷேக த்தின் போது புதிதாக மூன்றரை அடி உயரத்தில் முனீஸ்வரன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. தற்போது மண்டலாபிஷேகத்துக்காக தினந்தோறும் கோவிலில் பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று இரவு இங்கிருந்த முனீஸ்வரர் சிலையை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். இன்று காலை சிலை சேதமாகி இருந்ததை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து வத்தலக்குண்டு போலீ சாருக்கு தகவல் தெரி வித்தனர்.

போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அப்பகுதி யில் சி.சி.டி.வி காமிராக்கள் ஏதேனும் பொருத்தப்பட்டு ள்ளதா என்றும், அதில் குற்றவாளிகள் உருவம் பதிவாகியுள்ளதா என்றும் விசாரணை நடத்தி வரு கின்றனர். இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி நிர்வாகிகளும் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

Tags:    

Similar News