உள்ளூர் செய்திகள்

விநாயகர் சிலை மாயமாகி இருப்பதை படத்தில் காணலாம்.

பண்ருட்டியில் விநாயகர் சிலை திருட்டு போலீசார் விசாரணை

Published On 2023-11-22 07:30 GMT   |   Update On 2023-11-22 07:30 GMT
100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

கடலூர்:

பண்ருட்டி கடலூர் ரோடு சாமியார் தர்கா ெரயில்வே சப்வே அருகே அமைந்துள்ளது அய்யனார்கோவில்.இது 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இக் கோவில் குலதெய்வ கோவிலாக வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. இங்கு விநாயகர் சன்னதியில் கருங்கல்லால் ஆன விநாயகர் வைக்கப்பட்டு வழிபாடு செய்து வந்தனர்.

கடந்த 18-ந் தேதி காலைபூஜை செய்யபூசாரிசென்றபோது அங்கு அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.விநாயகர் சன்னதி யில் இருந்த விநாயகர் சிலை காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி கோவில் தர்மகர்த்தா ஜோதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அவர் கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப் -இன்ஸ்பெக்டர்கள் தங்கவேலு ,பிரசன்னா ஆகியோர் வழக்கு பதிவு செய்து காணாமல் சிலையை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News