உள்ளூர் செய்திகள்

சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 6 மோட்டார் சைக்கிள்களை படத்தில் காணலாம்.

மணலூர்பேட்டை அருகே பணம் வைத்து சூதாடியவர் கைது: 7 பேர் மீது வழக்கு: 6 மோட்டார் சைக்கிள் பறிமுதல்

Update: 2023-03-28 05:42 GMT
  • திருக்கோவிலூர் அருகே உள்ளமுருக்கம்பாடி கிராமத்தின் வனப் பகுதியில் காசு வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது சூதாடி கொண்டிருந்த 6 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். அதே சமயம் சூதாடியவர்களில் ஒருவரான திருவண்ணாமலை மாவட்டம் பெருமணம் கிராமத்தைச் சேர்ந்த வடிவேல் மகன் மணிகண்டன் (வயது 26) என்பவர் மட்டும் போலீசில் சிக்கினார்.
  • 6 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்,அதில் மணிகண்டன் (வயது 26) என்பவர் மட்டும் போலீசில் சிக்கினார்.

கள்ளக்குறிச்சி:

திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டை அடுத்த முருக்கம்பாடி கிராமத்தின் வனப் பகுதியில் காசு வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் விரைந்து சென்ற மணலூர்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் மதன்மோகன் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்

அப்போது போலீஸ் வருவதை கண்ட சூதாடி கொண்டிருந்த 6 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். அதே சமயம் சூதாடியவர்களில் ஒருவரான திருவண்ணாமலை மாவட்டம் பெருமணம் கிராமத்தைச் சேர்ந்த வடிவேல் மகன் மணிகண்டன் (வயது 26) என்பவர் மட்டும் போலீசில் சிக்கினார். அவரை கைது செய்த போலீசார் அங்கு சூதாடிய 7 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் சூதாடிய இடத்தில் இருந்து ரூ.150 பணமும் 6 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News