உள்ளூர் செய்திகள்

ஜி-20 பிரதிநிதிகள் இன்று மாமல்லபுரம் வருகை: தமிழ் பாரம்பரிய முறையில் வரவேற்பு

Published On 2023-07-28 15:29 IST   |   Update On 2023-07-28 15:29:00 IST
  • மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை சுற்றி பார்க்க வருகிறார்கள்.
  • உத்தண்டி டோல்கேட்டில் கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை அமைக்கப்பட்டுள்ளது.

மாமல்லபுரம்:

சென்னையில் நேற்று முன்தினம் "ஜி-20" நாடுகள் அமைப்பின் பேரிடர் அபாய குறைப்பு, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை பணிக்குழு மாநாடு துவங்கியது. அது இன்று நிறைவு பெறுகிறது. இதையடுத்து மாநாட்டிற்கு வந்துள்ள வெளிநாட்டு சுற்றுச்சூழல், பேரிடர் துறைகளின் அமைச்சர், பிரதிநிதிகள் இன்று மாலை மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை சுற்றி பார்க்க வருகிறார்கள்.

இவர்களுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கும் வகையில், இ.சி.ஆர் உத்தண்டி டோல்கேட்டில் கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, தமிழ் பாரம்பரிய வேட்டி கட்டிய வழிகாட்டிகள், கடற்கரை கோயில் வளாகத்தில் தமிழக பாரம்பரிய கரகாட்டம், தப்பாட்டம், பொய்கால் குதிரை ஆட்டம் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. பிரதிநிதிகளுக்கு தேனீர் விருந்து அளிக்கப்படுகிறது. பிரதிநிதிகள் திடீரென ஓய்வெடுக்க, கழிப்பறை செல்ல வசதியாக "கேரவன்" வாகனங்கள் கடற்கரை கோயில் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Similar News