உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு நிதிஉதவி-கலெக்டர் பூங்கொடி தகவல்

Published On 2023-10-08 13:14 IST   |   Update On 2023-10-08 13:14:00 IST
  • அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் இத்திட்டங்களை செயல்படுத்திட நிதி உதவி கோரி உரிய படிவத்தில் அனைத்து ஆவணங்களுடன் அரசுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • 4 பிரிவுகளில் ஏதேனும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பிரிவுகளை தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம் கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்:

வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் திட்டத்தின் கீழ், அரசு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் இத்திட்டங்களை செயல்படுத்திட நிதி உதவி கோரி உரிய படிவத்தில் அனைத்து ஆவணங்களுடன் அரசுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்தை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட காயமடைந்த தெருவில் சுற்றி திரியும் பிராணிகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளுக்கும் உணவு மற்றும் மருத்துவ சிகிச்சை அளிக்க நிதி உதவி, காயமடைந்த மற்றும் நோய்வாய்ப்பட்ட விலங்குகளுக்கு அவசர சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக மருத்துவ அவசர சிகிச்சை ஊர்தி கொள்முதல் செய்வதற்கு நிதி உதவி வழங்குதல்,

வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் திட்டத்தில் ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட காயமடைந்த தெருவில் சுற்றி திரியும் விலங்குகளுக்கு உறைவிடம் கட்டுவதற்கு நிதி உதவி வழங்குதல், தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் ஆதரவற்ற தெரு நாய்கள், விலங்குகளுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்துவதற்கு நிதி உதவி வழங்குதல் ஆகிய மேற்கண்ட 4 பிரிவுகளில் ஏதேனும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பிரிவுகளை தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம் கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News