உள்ளூர் செய்திகள்

சிறப்பு அலங்காரத்தில் வெள்ளிமலை முருகன்.

புலவன்குடியிருப்பு முருகன் கோவிலில் பவுர்ணமி பூஜை

Published On 2022-10-10 15:07 IST   |   Update On 2022-10-10 15:07:00 IST
  • பவுர்ணமி பூஜையில் முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
  • சிவ சன்னதியில் மாதந்தோறும் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது

ஏர்வாடி:

நெல்லை மாவட்டம் புலவன்குடியிருப்பு அருகே ஓம் ஸ்ரீபழனிவேல் முருகன் ஆலயம் பிரசித்தி பெற்ற திருத்தலமாக உருவெடுத்து வருகிறது.

இந்த ஆலயம் சேரன்மகாதேவி- களக்காடு சாலை மார்க்கத்தில் புலவன் குடியிருப்பு அரசன் நகரில் அமைந்துள்ளது.

இந்த ஆலயத்தில் மாதந்தோறும் பவுர்ணமி பூஜை மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற பவுர்ணமி பூஜையில் முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. அதன்பின்பு பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது. இக்கோவில் வளாகத்தில் ஸ்ரீபிங்களஷேன கால பைரவர் காமாட்சி அம்பாள் சமேத வெள்ளிமலை நாதர் சன்னதி அமைந்துள்ளது. சிவ சன்னதியில் மாதந்தோறும் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. தினமும் காலை 6 மணி முதல் 12.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் 8.30 மணி வரையிலும் நடை திறந்து பூஜை கைங்கேரியங்கள் நடைபெற்று வருகிறது. இந்த கோவிலை முருகனடியார் கணேஷ்குமார் நிர்வகித்து வருகிறார். இந்த கோவிலில் பிரார்த்தனைகள் அனைத்தும் உடனடியாக நிறைவேறி வருவதாக பக்தர்கள் கருத்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News