உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்
பெரியகுளம் அருகே பைக் விபத்தில் பழ வியாபாரி பலி
- சருத்துபட்டி அருகே வந்தபோது திடீரென நிலை தடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்தார்.
- பலத்த காயமடைந்த வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரியகுளம்:
திருப்பூர் சாமுண்டிபுரத்ைத சேர்ந்தவர் மணிகண்டன் (வயது49). பழ வியாபாரம் செய்து வந்தார். கேரள மாநிலத்தில்இருந்து பழம் வாங்கி வருவதாக வீட்டில் கூறி சென்றார்.
மோட்டார் சைக்கிளில் கேரளாவில் இருந்து தேனி வழியாக திருப்பூருக்கு சென்று கொண்டிருந்தார். திண்டுக்கல்-தேனி பைபாபஸ் சாலையில் சருத்துபட்டி அருகே வந்தபோது திடீரென நிலை தடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே மணிகண்டன் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து திருப்பூரில் உள்ள அவரது மகன் நவீனுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் பெரியகுளம் தென்கரை போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.