உள்ளூர் செய்திகள்

போக்குவரத்து போலீசாருக்கு பழச்சாறு, தொப்பிகள் வழங்கும் நிகழ்ச்சி.

விருத்தாசலத்தில் போக்குவரத்து போலீசாருக்கு பழச்சாறு, தொப்பிகள் வழங்கும் நிகழ்ச்சி

Published On 2023-03-31 16:03 IST   |   Update On 2023-03-31 16:03:00 IST
  • தமிழகம் முழுவதும் கடந்த 15 நாட்களுக்கு மேலாக கோடை வெயில் மக்களை சுட்டெரித்து வருகிறது
  • கோடை வெயிலில் எவ்வாறு பணி செய்ய வேண்டும் எனவும் உடல் நிலையை பேணி காப்பது குறித்தும் விழிப்புணர்வு கருத்துக்களை போலீசாருக்கு கூறினார்

கடலூர்:

தமிழகம் முழுவதும் கடந்த 15 நாட்களுக்கு மேலாக கோடை வெயில் மக்களை சுட்டெரித்து வருகிறது. இதனை பொருட்படுத்தாமல் கடமையை செவ்வென செய்யும் போலீசாருக்கு, உடல் வெப்பத்தை தணித்து, உடல்நிலையை காக்கும் விதமாக விருத்தாசலம் பாலக்கரை சந்திப்பில் போக்குவரத்து போலீசாருக்கு, விருத்தாசலம் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆரோ க்கியராஜ் கோடை வெயிலை தணிக்கும் தொப்பிகளை அணிவித்தும், உடல் உஷ்ணத்தை தவிர்க்கும் வகையில் பழச்சாறு மற்றும் தர்பூசணி பழங்களை வழங்கினார்.

மேலும் கோடை வெயிலில் எவ்வாறு பணி செய்ய வேண்டும் எனவும் உடல் நிலையை பேணி காப்பது குறித்தும் விழிப்புணர்வு கருத்துக்களை போலீசாருக்கு கூறினார். இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து இன்ஸ்பெ க்டர் வெங்கடேசன் மற்றும் விருத்தாசலம் நகர போக்குவரத்து போலீசார் கலந்து கொண்டனர்.கழ்ச்சி

Tags:    

Similar News