உள்ளூர் செய்திகள்

தாமலேரிப்பட்டி தெண்பண்ணையாற்றில் இருந்துஏரிகளில் நீர் நிரப்பக்கோரி ஆர்.டி.ஓ.,விடம் கோரிக்கை மனு

Published On 2023-10-01 15:47 IST   |   Update On 2023-10-01 15:47:00 IST
  • அரூர் ஆர்.டி.ஓ விடம் ஏரிகளில் நீர் நிரப்பக் கோரி சமூக ஆர்வலர்கள் மனு அளித்தனர்.
  • -100 ஏரிகளை நிரப்ப கோரிக்கை

அரூர் ஆர்.டி.ஓ வில்சன் ராசசேகரிடம் நேற்று அரூர் பகுதியைச் சேர்ந்த தாமலேரிப்பட்டி மற்றும் கே. வேட்ரப்பட்டி பொதுமக்கள் சார்பில் சமூக ஆர்வலர் ஜி. மாதேஸ்வரி, மணி, முருகன், மத்தியம்பட்டி சிவன், ரா ஜவேலு, பொன்னுரங்கன், ஆர்.ஆர்.ராஜா, மனோஜ் உள்ளிட்டோர் கோரிக்கை மனு ஒன்று அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது;-

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு இடையில் ஓடும் தென்பெண் ணையாற்றில் மழைக்கா லங்களில் வீணாக சென்று கடலில் கலக்கும் நீரை நீரேற்று நிலையம் அமைத்து அதன் மூலம் ஏரிகளில் நிரப்பிட வேண்டும்.

ஏற்கனவே 12 ஆண்டுகளுக்கு முன் கொளகம் பட்டி ஏரிக்கு நீரேற்று முறையின் மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டு பயன் பாட்டில் உள்ளது. இதே போன்று தென்பெண்ணை யாற்றில் கே. ஈச்சம்பாடி அணை நிரம்பி வீணாகிடும் நீரை சேமித்து, போர்வெல் மோட்டர் மூலம் பல டி.எம்.சி நீரை 100-க்கும் மேற்பட்ட ஏரிகளில் நிரப்பிடவேண்டும் . இதன் மூலம் பல்வேறு கிராமங்களில் விவசாயம் பெருகிடவும், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்திடவும் வழிவகுக்கும்.போர்க்கால அடிப்படையில் இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி யிருந்தனர். மனுவை பெற்ற ஆர்.டி.ஓ கோரிக்கை குறித்து உரிய துறை அதிகாரி களுடன் நேரில் ஆய்வு செய்து சாத்தி யக்கூறுகள் இருப்பின் அரசிற்கு பரிந்து ரைப்பதாக உறுதியளித்தார்.  

Similar News