உள்ளூர் செய்திகள்

மார்பக புற்றுநோய் கண்டறியும் இலவச சிறப்பு முகாம் நடைபெற்ற போது எடுத்த படம்.

மார்பக புற்றுநோய் கண்டறியும் இலவச சிறப்பு முகாம்

Published On 2022-11-22 10:20 GMT   |   Update On 2022-11-22 10:20 GMT
  • 40 வயதுக்கு மேற்பட்ட தாய்மார்கள், பெண்களுக்கு ஏற்படக்கூடிய மார்பக புற்றுநோயை கண்டறிந்து மருந்துகள் வழங்கப்பட்டது
  • வள்ளியூர் இன்னர் வீல் கிளப் தலைவர் ஜென்சி ராஜேஷ் முன்னிலையில் சிறப்பு முகாம் நடைபெற்றது

வள்ளியூர்:

வள்ளியூர் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் மற்றும் தனியார் மருத்துவமனை சார்பில் பெண்களுக்கான மார்பக புற்றுநோய் கண்டறியும் இலவச சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் 40 வயதுக்கு மேற்பட்ட தாய்மார்கள், பெண்களுக்கு ஏற்படக்கூடிய மார்பக புற்றுநோயை கண்டறிந்து, குறிப்பாக முதல் கட்டம், 2-வது கட்ட மார்பக புற்றுநோயை கண்டறிந்து அதற்கான ஆலோசனையும் மருந்துகளும் வழங்கினர். சுமார் 22 பெண்கள் கலந்து கொண்டு பலன் அடைந்தார்கள். வள்ளியூர் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் தலைவரும் மேக்ரோ காலேஜ் நிறுவனத்தின் தலைவருமான டாக்டர் பொன் தங்கதுரை தலைமையில் வள்ளியூர் இன்னர் வீல் கிளப் தலைவர் ஜென்சி ராஜேஷ் முன்னிலையில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த விழாவில் வள்ளியூர் சென்ரல் ரோட்டரி சங்கத்தின் கம்யூனிட்டி சர்வீஸ் சேர்மன் டாக்டர் சங்கரன் அவர்களும் முன்னாள் மாவட்ட ஆளுநர் நவமணி, முன்னாள் துணை ஆளுநர் முத்துகிருஷ்ணன், முன்னாள் தலைவர் சுப்பிரமணியன், செயலர் சுதிர்ந்தன், டாக்டர்கள் ஜேக்கப், ஜெய்கணேஷ், முன்னாள் தலைவர் பிரபா நவமணி, முன்னாள் தலைவர் வேல்முருகன், டாக்டர் தாமரைச்செல்வி கலந்து கொண்டனர். செயலர் சுகர்கந்தன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News