உள்ளூர் செய்திகள்
பழனி நாடார் எம்.எல்.ஏ. நோட்டு புத்தகம் வழங்கிய காட்சி.


சிவகிரியில் மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு-புத்தகங்கள்

Published On 2022-07-17 08:52 GMT   |   Update On 2022-07-17 08:52 GMT
  • காமராஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.
  • காமராஜரின் உருவம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சப்பர பவனி நடைபெற்றது.

சிவகிரி:

காமராஜர் பிறந்த நாள் விழா காங்கிரஸ் கட்சி சார்பாக நாடார் கடை பஜார் அருகே காமராஜர் கீழத்தெருவில் கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு காலையில் அன்னதானம் நடைபெற்றது. அன்னதானத்தை தென்காசி மாவட்ட காங்கிரஸ் ஓ.பி.சி. தலைவர் திருஞானம் தொடங்கி வைத்தார்.

மாலையில் காமராஜர் உருவப்படத்திற்கு தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவரும், தென்காசி தொகுதி எம்.எல்.ஏ.வுமான பழனி நாடார் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். நாடார் உறவின் முறை நாட்டாமை ராமமூர்த்தி வரவேற்று பேசினார்.

இதனைத் தொடர்ந்து பழனி நாடார் எம்.எல்.ஏ. 100 மாணவ- மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம், சிலேடு, பென்சிலும், பொதுமக்களுக்கு இனிப்பும் வழங்கினார். காமராஜர் கீழத்தெருவில் பழனி நாடார் எம்.எல்.ஏ. நடந்து செல்லும் போது ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.

பிள்ளையார் கோவில் அருகில் வைத்து மாற்று கட்சியிலிருந்து காளீஸ்வரன், மதன் ஆகியோர் உள்பட 20 இளைஞர்கள் விலகி பழனிநாடார் எம்.எல்.ஏ. முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட காங்கிரஸ் ஓபிசி தலைவர் திருஞானம், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் குருசாமி பாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கணேசன், நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் சண்முக சுந்தரம், தொகுதி ஓபிசி தலைவர் காந்தி, நகர பொருளாளர் விநாயகம், வட்டார செயலாளர் மருதப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.நாடார் உறவின் முறை செயலாளர் தர்மராஜ் நன்றி கூறினார்.

இதனைத் தொடர்ந்து சிவகிரி அருகே உள்ள இனாம்கோவில்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே காமராஜரின் திருவுருவம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சப்பர பவனி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பழனிநாடார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி சப்பர பவனியை தொடங்கி வைத்தார். சப்பர பவனி முக்கிய வீதிகளில் வலம் வந்தது. தொடர்ந்து அன்னதானத்தை பழனிநாடார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News