உள்ளூர் செய்திகள்

முகாமில் பெண் ஒருவருக்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது எடுத்த படம்

கோபாலசமுத்திரத்தில் கிராம உதயம் சார்பில் இலவச மருத்துவ முகாம்

Published On 2022-09-22 13:29 IST   |   Update On 2022-09-22 13:29:00 IST
  • கிராம உதயம் தலைமை அலுவலகம் கோபால சமுத்திரம் மற்றும் நெல்லையில் உள்ள அல் ஷிஃபா ஆயுஷ் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
  • மருத்துவ முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மற்றும் மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது.

நெல்லை:

கிராம உதயம் தலைமை அலுவலகம் கோபால சமுத்திரம் மற்றும் நெல்லையில் உள்ள அல் ஷிஃபா ஆயுஷ் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை கிராம உதயம் நிர்வாக இயக்குநர் டாக்டர் சுந்தரேசன் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். கிராம உதயம் ஆலோசனை குழு உறுப்பினர் வழக்கறிஞர் டாக்டர் புகழேந்தி பகத்சிங் முன்னிலை வகித்தார். கிராம உதயம் நிர்வாக மேலாளர் மகேஷ்வரி வரவேற்று பேசினார்.

அல் ஷிஃபா மருத்துவமனை பொது நல மருத்துவர் ஏசுபிரியா தலைமையில் மருத்துவ குழுவினர்கள், செவிலியர்கள் இணைந்து மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அல் ஷிஃபா மருத்துவமனை மேலாளர் முகமது முஸ்தபா சிறப்புரை ஆற்றினார். கிராம உதயம் பகுதி பொறுப்பாளர் குமாரி நன்றி கூறினார். மருத்துவ முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மற்றும் மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது.

Tags:    

Similar News