உள்ளூர் செய்திகள்

கோத்தகிரி ஆஸ்பத்திரியில் இலவச மருத்துவ முகாம்

Published On 2023-09-25 15:09 IST   |   Update On 2023-09-25 15:09:00 IST
  • அனைத்து வகையான நோய்களுக்கும் மருத்துவ ஆலோசனை, பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட்டன.
  • சிகிச்சைக்கு வந்திருந்தவர்களுக்கு சிவகாமி எஸ்டேட் உரிமையாளர் சிவக்குமார் சார்பில் இலவச பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டது.

அரவேணு,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சிவகாமி எஸ்டேட் நிறுவனம், கோவை குமரன் மருத்துவமனை ஆகியவை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

அப்போது கோத்தகிரி, கீழ்கோத்தகிரி, எஸ்.கைகாட்டி, சோலூர்மட்டம், ஓம்நகர், நெடுகுளா, சுள்ளிகூடு, கஸ்தூரிபாய்நகர், சுண்டட்டி, கோடநாடு ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு அனைத்து வகையான நோய்களுக்கும் மருத்துவ ஆலோசனை, பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட்டன.

முன்னதாக சிவகாமி எஸ்டேட் உரிமையாளர் சிவக்குமார் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். இதில்குழந்தைகள் , பெண்கள், முதியவர்கள் உள்பட 900-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

மேலும் சிகிச்சைக்கு வந்திருந்தவர்களுக்கு சிவகாமி எஸ்டேட் உரிமையாளர் சிவக்குமார் சார்பில் இலவச பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டது.

Tags:    

Similar News