உள்ளூர் செய்திகள்

முகாம் நடைபெற்றபோது எடுத்தபடம்.

சில்லரைபுரவு ஊராட்சியில் இலவச கண் சிகிச்சை முகாம்

Published On 2022-11-15 14:39 IST   |   Update On 2022-11-15 14:39:00 IST
  • காக்கையனூர் டி.டி.டி.ஏ. நடுநிலைப்பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
  • முகாமில் 100-க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டு கண் பரிசோதனைகளை செய்து கொண்டனர்.

தென்காசி:

உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு தென்காசி ஊராட்சி ஒன்றியம் சில்லரைபுரவு ஊராட்சிக்கு உட்பட்ட காக்கையனூர் டி.டி.டி.ஏ. நடுநிலைப்பள்ளியில் ஊராட்சி நிர்வாகம், தென்காசி ப்ரோ விஷன் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

ஊராட்சி மன்ற தலைவர் என்.குமார் தலைமை தாங்கி முகாமினை தொடங்கி வைத்தார். முகாமில் 100-க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டு கண் பரிசோதனைகளை செய்து கொண்டனர். 13 நபர்களுக்கு கண் குறைபாடு இருந்ததையடுத்து மேல் சிகிச்சைக்காக அவர்கள் தென்காசி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் சில்லரைபுரவு ஊராட்சி மன்ற செயலர் செண்பகராஜன் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News