உள்ளூர் செய்திகள்
கண் சிகிச்சை முகாம் குத்துவிளக்கேற்றி தொடங்கப்பட்ட காட்சி.
கடையத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்
- நெல்லை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் நிதி உதவியுடன் கண் சிகிச்சை முகாம்.
- முகாமில் பலர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்
கடையம்:
நெல்லை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் நிதி உதவியுடன் கிராம உதயம் மற்றும் கடையம் ரிலையபிள் கல்வி நிறுவனம் மற்றும் தனியார் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம், கடையம் ரிலையபிள் கல்வி நிறுவனத்தில் நடைபெற்றது.
நிறுவன தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக கீழக்கடையம் ஊராட்சி மன்ற தலைவர் பூமிநாத், ஒன்றிய கவுன்சிலர் மாரி குமார்,
கடையம் வட்டார காங்கிரஸ் துணைத்தலைவர் சாத்தா ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமில் பலர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.இதற்கான ஏற்பாடுகளை கணேசன் ஒருங்கிணைத்தார்.