உள்ளூர் செய்திகள்

கண் பரிசோதனை முகாம் நடந்தபோது எடுத்த படம்

செங்கோட்டை அருகே இலவச கண் பரிசோதனை முகாம்

Published On 2023-05-09 14:23 IST   |   Update On 2023-05-09 14:23:00 IST
  • செங்கோட்டை அருகே உள்ள வல்லத்தில் ஷிபா மெடிக்கல் சென்டர் திறப்பு விழா மற்றும் இலவச கண்பரிசோதனை முகாம் நடந்தது.
  • முகாமில் வல்லம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை மற்றும் ஆலோசனை பெற்று சென்றனா்.

செங்கோட்டை:

செங்கோட்டை அருகே உள்ள வல்லத்தில் ஷிபா மெடிக்கல் சென்டர் திறப்பு விழா மற்றும் இலவச கண்பரிசோதனை முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு வல்லம் ஜமாஅத் தலைவா் அகமது மீரான் தலைமை தாங்கினார்.கடையநல்லுார் கே.எம்.எஸ். மருத்துவமனை நிர்வாகக்குழு தலைவா் அப்துல்ரஷீத் முன்னிலை வகித்தார். வல்லம் நேஷனல் பள்ளி தாளாளா் அப்துல்மஜீத் வரவேற்று பேசினார். அதனைத்தொடா்ந்து வல்லம் ஜூம்மா மஜீத் பள்ளிவாசல் தலைமை இமாம் சுல்தான் ஷிபா மெடிக்கல் சென்டரை திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார். பின்னா் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இலவச கண்பரிசோதனை முகாமை குற்றாலம் முத்துநகர் அரிமா சங்க பட்டயத்தலைவா் சண்முகநாதன் தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.

முகாமில் நெல்லை டாக்டர் அகர்வால் கண்மருத்துவமனை கண் மருத்துவா் அபினயா தலைமையில் மருத்துவ குழுவினா் இலவச கண்பரிசோதனை மற்றும் மருந்து ,கண்கண்ணாடி, மருத்துவ ஆலோசனைகள் வழங்கினா். நிகழ்ச்சியில் முதன்மை முகாம் மேலாளா் மாணிக்கம், விழிஒளி ஆய்வாளா் சிஞ்சு, உதவி விழிஒளி ஆய்வாளா்கள் மனோ, ஹசீனா உள்பட பலா் கலந்து கொண்டனா். முகாமில் வல்லம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை மற்றும் ஆலோசனை பெற்று சென்றனா். ஷிபா மெடிக்கல் சென்டர் நிர்வாகி பீர் முகம்மது நன்றி கூறினார்.

Tags:    

Similar News