உள்ளூர் செய்திகள்
முகாமில் மருத்துவர்கள் கண் பரிசோதனை செய்த போது எடுத்த படம்.
சூளகிரி அரசு பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம்
- ஒசூர் சிப்காட் லயன்ஸ் கிளப் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தியது.
- இந்த முகாமிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் மகாதேவன் தலைமை வகித்தார்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒசூர் சிப்காட் லயன்ஸ் கிளப் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தியது.
இந்த முகாமிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் மகாதேவன் தலைமை வகித்தார். லயன்ஸ் கிளப் தலைவர் பிரேம் ஆனந்த், தாளாளர் தேவராஜன், ஆலோசகர் நம்பி, முகாம் ஒருங்கிணைப்பாளர் சசிகுமார் மற்றும் பள்ளி பி.டி.ஏ. நிர்வாகிகள் சுதா கர், ஜெபஸ்டின் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் 70-க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு கண்களை இலவசமாக பரிசோதனை செய்து கொண்டனர்.