முகாமில் மருத்துவர்கள் கண் பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கிய காட்சி.
எம்.கே.எஸ் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம்
- கண் பரிசோதனை செய்யப்பட்டு மருத்துவர் ஆலோசனை வழங்கினார்.
- குறைந்த விலையில் கண்ணாடி கள் வழங்கப்படும் என தெரிவித்தார்.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டினம் கோபி கிருஷ்ணா மெட்ரிக் பள்ளியில், மத்தூர் மாநகர அரிமா சங்கம் சார்பில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் கோபி கிருஷ்ணா பள்ளி தலைவர் எம்.கே.எஸ் மாதன் முன்னிலை வகித்தார். எம்.கே.எஸ் பள்ளியின் தாளாளர் புஷ்பக் தலைமை யேற்று, குத்துவிளக்கு ஏற்றி கண் சிகிச்சை முகாமை தொடங்கி வைத்தார். பள்ளி துணைத் தலைவர் எம்.கே.எஸ் பிரசன்ன குமார் வாழ்த்துரை வழங்கினார்.
இம்முகாமில் கண்ணில் புரை, கண்ணில் நீர் வடிதல், உள்ளிட்ட அனைவருக்கும் விரிவான கண் பரிசோதனை செய்யப்பட்டு கண் மருத்துவர் கலந்து ஆலோசனை வழங்கினார்.
மேலும் கண்ணாடி அணிபவர்களின் கண்ணாடி பரிசோதித்து மிக குறைந்த விலையில் ஓரிரு நாட்களில் கண்ணாடி கள் வழங்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் இப்பள்ளியில் படித்த மாணவி ரம்யா அரசு மருத்துவக் கல்லூரியில் பயில தேர்வாகியுள்ளார் என கோபி கிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் புஷ்பக் தெரிவித்தார். இதனை யடுத்து அந்த மாணவியை அனைவரும் பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் மத்தூர் மாநகர அரிமா சங்க உறுப்பினர்கள் பள்ளியின் முதல்வர் நிர்வாக அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் முதியோர் ஏராளமானோர் கண் சிகிச்சை முகாமில் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.