உள்ளூர் செய்திகள்

பல்வேறு பணிகளுக்கான தேர்வில் பங்கேற்க மாணவர்களுக்கு இலவச பயிற்சி

Published On 2023-03-11 08:30 GMT   |   Update On 2023-03-11 08:30 GMT
  • 11ஆயிரம் காலியான அரசு பணியிடங்கள் தேர்வாணையத்தால் நிரப்பப்பட உள்ளது.
  • தேர்வு நடைபெறும் முறை அனைத்தும் இணையதளம் வழியாக நடைபெறும்.

கடலூர்:

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர், பழங்குடியின பிரிவினைச் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் பணியாளர் அரசு தேர்வு ஆணையம் நடத்தும் பல்வேறு தேர்வுகளுக்கு 2023-ம் ஆண்டிற்கான தேர்வு நாட்காட்டி அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பல்வேறு தேர்வுகளுக்கான 11ஆயிரம் காலியான அரசு பணியிடங்கள் தேர்வாணையத்தால் நிரப்பப்பட உள்ளது. இத்தேர்வில் ஆதிதிராவிடர் , பழங்குடியின மாணவர்கள் பங்கேற்று தேர்ச்சி பெற தாட்கோ மூலமாக இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் 18 முதல் 32 வயது வரை உள்ள பத்தாம் வகுப்பு, 12-ம் வகுப்பு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்து முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேர்வு நடைபெறும் முறை அனைத்தும் இணையதளம் வழியாக நடைபெறும்.

இப்போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்று பணியாளர் தேர்வாணையத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு தகுதிகேற்ப ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ.18 ஆயிரம் முதல் ரூ.22 ஆயிரம் வரை பணியமர்த்தப்படுவார்கள். இத்தேர்வில் ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் பயிற்சி பெற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் இப்பயிற்சிக்கான கட்டணம் முழுவதும் தாட்கோவால் வழங்கப்படும்.இத்திட்டம் தொடர்பான விபரங்கள் மற்றும் பதிவு செய்வதற்கு தாட்கோ இணையதளம் மூலம் கடலூர் மாவட்டத்தில் உள்ள தகுதியான அனைத்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ- மாணவிகள் விண்ணப்பித்து பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

Tags:    

Similar News