கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ்
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு- கலெக்டர் தகவல்
- தினமும் பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்று வருகிறது.
- உடற்கூறு தேர்விற்கும் இலவச பயிற்சிகள் அளிக்கப்படும்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம், அறிவித்துள்ள சார்பு ஆய்வாளர் தாலுக்கா, ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை போன்ற பிரிவுகளை உள்ளடக்கிய 621 காலி பணியிடங்களுக்கான தேர்விற்கு நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் கடந்த மாதம் (மே) 3-ந் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்பட்டு தினமும் பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்று வருகிறது.
மேலும், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம், அறிவிக்கையின்படி இணைய வழி விண்ணப்பம் கடந்த 1-ந் தேதி முதல் வருகிற 30-ந் தேதி வரையில் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டு ள்ளது.எனவே, நாகை மாவட்ட த்தை சேர்ந்த கல்வி தகுதியுள்ள அனைவரும், இந்த காவலர் சார்பு ஆய்வாளர் தேர்விற்கு விண்ணப்பித்து நாகப்ப ட்டினம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெ றி வழிகாட்டும் மையத்தில் நடைபெற்று வரும் இலவச போட்டி தேர்வு பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு தேர்வில் வெற்றி பெறுப வர்களுக்கு அடுத்தகட்ட தேர்வான உடற்கூறு தேர்விற்கும் இலவச பயிற்சிகள் அளிக்க ப்படும். இப்பயிற்சி யில் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.