உள்ளூர் செய்திகள்

திருக்குறுங்குடியில் உள்ள பள்ளியில் மாணவிகளுக்கு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. இலவச சைக்கிள்களை வழங்கியபோது எடுத்த படம்.

நாங்குநேரி, திருக்குறுங்குடி பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள்- ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வழங்கினார்

Published On 2023-07-25 09:16 GMT   |   Update On 2023-07-25 09:16 GMT
  • தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பரிசுகளை வழங்கினார்.
  • 71 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டது.

நெல்லை:

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. நாங்குநேரி சங்கர் ரெட்டியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10, 11-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 வகுப்பில் கடந்த 2022-2023-ம் ஆண்டுத் தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். அதன்பின் தமிழ்நாடு அரசின் இலவச சைக்கிள் களை 18 மாணவர்களுக்கு வழங்கினார்.

71 மாணவர்கள்

தொடர்ந்து திருக்குறுங்குடி டி.வி.எஸ். அரசு மேல்நிலைப்பள்ளியிலும் அந்த பள்ளியில் 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்பில் கடந்த 2022-2023-ம் ஆண்டு வெளிவந்த ஆண்டுத் தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். அதன்பின் தமிழ்நாடு அரசின் இலவச சைக்கிள்களை 71 மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்.

நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறு ப்பாளர் வி.என்.கே. அழகிய நம்பி, திருக்குறுங்குடி பேரூ ராட்சி தலைவர் இசக்கி தாய், நாங்குநேரி மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.எஸ். சுடலைகண், மறுகால்கு றிச்சி ஊராட்சி தலைவி சாந்தகுமாரி செ ல்லையா, மாவட்ட துணைத் தலைவர் கக்கன், மாவட்ட பொதுச் செய லாளர் நம்பி த்துரை, தி.மு.க. பொதுக்குழு உறு ப்பினர் மாடசாமி, முன்னாள் மாநில பொ துக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் போர்டு, மாவட்ட செய ற்குழு உறுப்பினர் சுந்தர், திருக்குறுங்குடி காங்கிரஸ் நகர தலைவி ராசாத்தி, களக்காடு தெற்கு வட்டார தலைவர் அலெக்ஸ், கவுன்சிலர் மீகா, நாங்குநேரி மத்திய வட்டார தலைவர் ராமஜெயம், பாளை தெற்கு வட்டார தலைவர் நளன், முன்னாள் ஏ.ஐ.சி.சி. வசந்தா, நெல்லை பாராளு மன்ற இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் எம்.எம். ராஜா, தி.மு.க. செயற் குழு உறுப்பினர் மாய கிருஷ்ணன், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உடையார், ராம நாதன், வின்சென்ட், தங்க லெட்சுமி, லதா மற்றும் காங்கிரஸ், தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News