உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை பழனி நாடார் எம்.எல்.ஏ. வழங்கிய காட்சி.


வீரகேரளம்புதூரில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள்

Published On 2022-09-14 08:44 GMT   |   Update On 2022-09-14 08:44 GMT
  • வீரகேரளம்புதூர் அண்ணா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
  • நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் டயானா ஆனி ராஜம்மாள் தலைமை தாங்கினார்.

சுரண்டை:

வீரகேரளம்புதூர் அண்ணா ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் டயானா ஆனி ராஜம்மாள் தலைமை தாங்கினார். ஊத்துமலை ஜமீன்தாரரும், ஒன்றிய கவுன்சிலருமான முரளி ராஜா, பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் டேவிட் லிவிங்ஸ்டன், கீழப்பாவூர் ஒன்றிய சேர்மன் காவேரி, வீரகேரளம்புதூர் பஞ்சாயத்து தலைவர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் ரவிக்குமார் வரவேற்றார்.

அண்ணா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் வீரகேரளம்புதூர் புனித அந்தோணியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை பழனி நாடார் எம்.எல்.ஏ. வழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் ஹேமா, தர்மராஜ், காங்கிரஸ் மாவட்ட பிரதிநிதி தாயார் தோப்பு ராமர், அண்ணாமலை செட்டியார், நவநீதகிருஷ்ணன், தி.மு.க. கிளைச் செயலாளர் மணி, மாவட்ட ஐ.என்.டி.யூ.சி. தலைவர் ரஞ்சித் மற்றும் ஆசிரியர்கள் மாரியப்பன், டென்னிசன் உட்பட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News