உள்ளூர் செய்திகள்

பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் அளித்தனர்.

சீர்காழி அருகே வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி ரூ.50 லட்சம் மோசடி

Published On 2022-10-12 10:01 GMT   |   Update On 2022-10-12 10:01 GMT
  • ஒவ்வொருவரிடமும் பணத்தை வாங்கிக் கொண்டு எங்களிடம் பாஸ் ேபார்ட்டையும் பெற்றுக் கொண்டு கடந்த ஒரு வருடமாக அலைக்கழித்துவருவதாக தெரிவித்தார்.
  • வெளிநாடு வேலை வேண்டாம், வாங்கிய பணத்தை திருப்பி கொடுங்கள் எனக் கேட்டால் மிரட்டல் விடுக்கிறார் என பாதிக்கப்பட்டவர்கள் கூறினர்.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த புத்தூர் பகுதியில் ரகுமான் என்பவர் வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் நிறுவனம் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் ரகுமானிடம் வெளிநாடு வேலை செல்வதற்கு பணம் கொடுத்து இதுவரை விசா வராமல் ஏமாற்றம் அடைந்ததாக 40-க்கும் மேற்பட்டவர்கள் புகார் கொடுக்க சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் வந்தனர்.

இதில் குத்தாலம் பகுதியை சேர்ந்த ராஜதுரை, கும்பகோணம் பகுதி யாசர், திருப்பத்தூர் பகுதி மணிமொழி, மற்றும் தைக்கால், கூத்தியம்–பேட்டை, மணல்மேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 40-க்கும் மேற்பட்டவர்கள் பணம் கொடுத்ததற்கான புகைப்பட ஆதாரங்களுடன் புகார் மனு அளித்தனர்.

இது குறித்த பாதிக்கப்பட்ட ஒருவர் கூறுகையில், ரகுமான் ஒவ்வொருவரிடமும் 1 லட்சம், 90 ஆயிரம், 1 லட்சத்து 20 ஆயிரம் என வெளிநாடு வேலைக்கு தகுந்தாற்போல் பணத்தை வாங்கிக் கொண்டு எங்களிடம் பாஸ் ேபார்ட்டையும் பெற்றுக் கொண்டு கடந்த ஒரு வருடமாக அலைக்கழித்துவருவதாக தெரிவித்தார்.

மேலும் வெளிநாடு வேலை வேண்டாம், வாங்கிய பணத்தை திருப்பி கொடுங்கள் எனக் கேட்டால் மிரட்டல் விடுக்கிறார் என பாதிக்கப்பட்டவர்கள் கூறினர்.

காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து எங்களது பணத்தையும், பாஸ்போர்ட்டையும் மீட்டு தர வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News