உள்ளூர் செய்திகள்

பொரவச்சேரியில் அமைய உள்ள நவீன அரிசி ஆலைக்கு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் அடிக்கல் நாட்டினார்.

பொரவச்சேரியில், அரிசி ஆலை அமைக்க அடிக்கல் நாட்டு விழா

Published On 2023-06-05 14:38 IST   |   Update On 2023-06-05 14:38:00 IST
  • நாகை மாவட்டத்தில் முதல்முறையாக இந்த நவீன அரிசி ஆலை அமைக்கப்படுகிறது.
  • நெல்கள் வெளிமாவட்டங்களுக்கு அரவைக்கு அனுப்பும் செலவு குறையும்.

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்டம் பொரவச்சேரி கிராமத்தில் தமிழக அரசின் நீட்ஸ் திட்டத்தின் கீழ் நவீன அரிசி ஆலை அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

மஞ்சகொல்லை ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. ஒரு ஏக்கர் பரப்பளவில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ள நவீன அரிசி ஆலைக்கான அடிக்கல்லை தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் நட்டு கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் முதல்மு றையாக அமைக்கப்படும் இந்த நவீன அரிசி ஆலை மாவட்ட வளர்ச்சியில் முக்கிய பங்கு வைக்கும் எனவும், ஓராண்டுக்குள் கட்டி முடிக்கப்பட உள்ள இந்த நவீன அரிசி ஆலை பயன்பாட்டிற்கு வரும் பொழுது நாகை மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்படும் நெல்கள் வெளி மாவட்டங்களுக்கு அரவைக்கு அனுப்பும் செலவு குறையும் எனவும் கௌதமன் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. நாகை தெற்கு ஒன்றிய செயலாளர் ஆனந்த், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கணேசன், அரிசி ஆலையின் நிர்வாக இயக்கு னர் கணேசன் ஆறுமுகம் மற்றும் வணிகர்கள் விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News