உள்ளூர் செய்திகள்

கட்டிடம் கட்டும் பணிக்கு ஷா நவாஸ் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்.

அரசு பள்ளியில் சமையலறை கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

Published On 2022-11-17 07:41 GMT   |   Update On 2022-11-17 07:42 GMT
  • அருகிலுள்ள பள்ளியிலிருந்து சமையல் செய்து உணவு எடுத்துவரும் நிலை இருந்தது.
  • ரூ. 6 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு சமையலறை கட்டிடம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் நகராட்சி நாகூர் பெருமாள் கீழ வீதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் சமயலறை கட்டடம் இல்லாததால், அருகிலுள்ள பள்ளியிலிருந்து சமையல் செய்து உணவு எடுத்துவரும் நிலை இருந்தது.

எனவே, உயர்நிலைப் பள்ளிக்கு சமயலறை கட்டடம் கட்ட வேண்டுமென நாகை எம்.எல்.ஏவிடம் பள்ளியின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

அந்தக் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தற்போது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.6 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு சமையலறை கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வில் நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் கலந்து கொண்டு பணியினை தொடங்கி வைத்தார்.

இதில் நாகப்பட்டினம் நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, துணைத் தலைவர் செந்தில் குமார், நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி, நகர்மன்ற உறுப்பினர்கள், வி.சி.க. மாவட்டப் பொறுப்பாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News