உள்ளூர் செய்திகள்

தென்காசி கலெக்டரிடம், முன்னாள் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மனு

Published On 2023-08-12 14:29 IST   |   Update On 2023-08-12 14:29:00 IST
  • ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டுவதற்கான அரசாணை கடந்த 7.12.2022-ம் ஆண்டு தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
  • பரிந்துரைக்கப்பட்ட இடத்தில் நீதிமன்றமும், நீதிபதிகள் குடியிருப்பும் அமைவதற்கு ஆவணம் செய்ய வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

தென்காசி:

தென்காசி தெற்கு மாவட்ட முன்னாள் தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் கலெக்டர் ரவிச்சந்திரனை சந்தித்து ஒரு மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

தென்காசி மாவட்டத்தில் அமைய இருக்கிற ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் மற்றும் குடியிருப்புககுக்கான இடம் ஆய்க்குடி கிராமம் சர்வே எண் 84-ல் 5.54 ஹெக்டேர் மற்றும் சர்வே எண் 97-ல் 1.95 ஹெக்டேர் ஆக மொத்தம் 18.5 ஏக்கர் நிலம் நீதிமன்றம் கட்டிடம் கட்டுவதற்காக பரிந்துரைக்கப்பட்டது. ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டுவதற்கான அரசாணை கடந்த 7.12.2022-ம் ஆண்டு தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசாணை எண் 917 ஆகும்.

தற்போது நீதிமன்ற கட்டிடம் கட்டுவதற்கு பரிந்துரைக்கப்பட்ட இடத்தில் பிற கட்டிடங்கள் கட்டுவதற்கு பரிந்துரைக்கப்பட்டதாக அறிகிறோம். ஏற்கனவே மேற்கண்ட இடத்தில் நீதிமன்றமும், நீதிபதிகள் குடியிருப்பும் அமைவதற்கு ஆவணம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இது சம்பந்தமாக கலெக்டரிடம் சிவபத்மாதன் கூறுகையில், ஏற்கனவே பாதை பிள்ளையான் கட்டளைக்கு பாத்தியப்பட்ட இடத்தை இந்த இடத்திற்கு செல்வதற்கு வழிப்பாதை அமைத்து கொடுக்க வேண்டும் என்று ஏற்கனவே இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் குமரகுருபரனை சந்தித்து மனுக்களையும் வழங்கி இருக்கிறோம். அன்றைய தினத்தில் பொறுப்பில் இருந்த மாவட்ட கலெக்டர் ஆகாஷ், இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் வழிப்பாதை சம்பந்தமாக சில விதிமுறை கள் இருப்பதை சுட்டிக்காட்டி யதாக கூறினார்.

அப்போது தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர் சாமிதுரை, கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சீனித்துரை, மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் வேலுச்சாமி, வக்கீல்கள் சங்கத் தலைவர் புகழேந்தி, கைலாசம், மாட கண்ணு, வீரமணி கண்டன், ராஜா முத்துக்குமாரசாமி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News