உள்ளூர் செய்திகள்

தருமபுர ஆதீனத்திடம் ஆசிபெற்ற இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன்.

தருமபுர ஆதீனத்திடம் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் அருளாசி

Update: 2022-09-25 10:30 GMT
  • மேட் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 82 சதவீத பொருட்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன.
  • வேறு வேறு துறைகள் என்றாலும் ஆன்மீக அறிவியல் குறித்து ஆராய்ச்சிகள் செய்யப்பட வேண்டும்.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் புகழ்பெற்ற அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோயிலில் இஸ்ரோ அமைப்பின் முன்னாள் தலைவரும், விக்ரம் சாராபாய் நிறுவனத்தின் சிறப்பு பேராசிரியருமான டாக்டர் சிவன் தனது மனைவி மாலதியுடன் சிறப்பு வழிபாடு மற்றும் ஆயுஷ் ஹோம பூஜையில் பங்கேற்றார். தொடர்ந்து மயிலாடுதுறை அருகே பழமை வாய்ந்த தர்மபுரம் ஆதின மடத்தில் 27 வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்–சாரியார் சுவாமிகளை சந்தித்து குடும்பத்துடன் ஆசி பெற்றார். அவருக்கு ஆதினம் சார்பில் நினைவு பரிசாக திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய சிவன், தருமபுரம் ஆதீனம் நாட்டின் தொன்மையான மடமாகும். இது சைவத்துடன் தமிழையும் வளர்த்து வருவது மகிழ்ச்சிக்குரியது. நமது நாடு விண்வெளி துறையில் மட்டுமல்லாது அணுசக்தி துறை, வேளாண் துறை, வேளாண் அறிவியல் துறை ரசாயனத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வளர்ச்சி கண்டு வருகிறது. விரைவில் இந்தியா உலகத்தில் முதன்மையான நாடாக உருமாறும்.

தற்போது மேட் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 82 சதவீத பொருட்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன. விரைவில் 100 சதவீதம் என்ற இலக்கை எட்டும், மாணவர்கள் தங்களுக்கு எதிர்காலத்தில் வாய்ப்புள்ள துறைகளை தேர்ந்தெடுத்து ஆழ்ந்து படிக்க வேண்டும். அறிவியலும் ஆன்மீகமும் வேறு வேறு துறைகள் என்றாலும் ஆன்மீக அறிவியல் குறித்து மேலும் ஆராய்ச்சிகள் செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News