உள்ளூர் செய்திகள்

வனப்பகுதியில் பற்றி எரிந்துவரும் காட்டுத்தீ.

கடமலை-மயிலை வனப்பகுதியில் காட்டுத்தீயில் சிக்கி மரங்கள் எரிந்து நாசம்- நவீன கருவிகள் பயன்படுத்த கோரிக்கை

Published On 2023-03-17 11:12 IST   |   Update On 2023-03-19 09:50:00 IST
  • மேகமலை அருவியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது.
  • நவீன தீயணைக்கும் கருவிகள் கொண்டு தீயை அணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வருசநாடு:

தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியத்தில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வனப்பகுதி அமைந்துள்ளது. கோடை காலங்களில் வனப்பகுதிகளில் காட்டுத்தீ பரவுவது வழக்கம். அதுபோன்று காட்டுத்தீ ஏற்படும் நேரங்களில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராடி தீயை அணைத்து வருகின்றனர்.

நேற்று மேகமலை அருவியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. அந்த பகுதியில் காய்ந்த புற்கள் அதிக அளவில் இருந்ததால் காட்டுத்தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கு பரவியது. இதில் ஏராளமான மரங்கள் தீயில் கருகி வீணானது. தொடர்ந்து அந்தப் பகுதியில் தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல் பஞ்சம் தாங்கி மலைப்பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து காட்டுத்தீ எரிந்து வருகிறது. இதற்கிடையே வனத்துறை யினரிடம் தீயை அணைக்க நவீன கருவிகள் எதுவும் இல்லை. தற்போது வரை மரக்கிளைகள் பயன்ப டுத்தியே தீயை அணைக்கும் நிலை காணப்படுகிறது. சிறிய அளவிலான தீ விபத்துக்கள் என்றால் மரக்கிளைகளை வைத்து தீயை அணைப்பது சாத்தியம். ஆனால் பெரிய அளவிலான தீ விபத்துக்கள் ஏற்படும் போது மரக்கிளைகளை வைத்து தீயை அணைப்பது சாத்திய மற்றதாகும்.

எனவே பெரிய அளவி லான தீ விபத்து ஏற்படு ம்போது வனத்துறையினர் தீயை அணைக்க முடியாமல் திணறி வருகின்றனர். இதேபோல் வனத்துறை அலுவலகங்களில் பணியா ளர்கள் பற்றா க்குறையும் உள்ளது. தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால் காட்டுத்தீ அபாயம் அதிகரி த்துள்ளது. எனவே நவீன தீயணைக்கும் கருவிகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதே போல் அதிகம் காட்டுத்தீ ஏற்படும் இடங்களை கண்காணித்து அந்த பகுதி களில் தீ தடுப்பு கோடுகள் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News