உள்ளூர் செய்திகள்

பொள்ளாச்சியில் இலவச மரக்கன்றுகள் பெற விவசாயிகளுக்கு வனத்துறை அழைப்பு

Published On 2022-06-14 10:08 GMT   |   Update On 2022-06-14 10:08 GMT
  • விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் நடவு செய்ய இலவச மரக்கன்றுகளை பெற்றுக்கொள்ள வனத்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
  • விவசாயிகள் மரக்கன்று தேவைப்பட்டால் நிலத்தின் சிட்டா, உரிமையாளரின் ஆதார் நகல், ஒரு புகைப்படம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

பொள்ளாச்சி:

வனத்துறை சார்பில் தேக்கு, ஈட்டி, சவுக்கு, செம்மரம், நாவல் மற்றும் பல்வேறு வகையான நாற்றுக்கள் பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டத்தின் கீழ் வளர்க்கப்பட்டுள்ளன.

இந்த நாற்றுக்களை விவசாயிகள், தன்னார்வலர்கள் மற்றும் வீடுகளில் வளர்க்க விரும்புபவர்கள் வனத்துறையினரிடம் சென்று விண்ணப்பித்தால் இலவசமாக மரக்கன்றுகளை பெற்றுக் கொள்ள முடியும்.

வரும் ஆகஸ்ட் மாத இறுதி முதல் மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளன. விவசாயிகள் மரக்கன்று தேவைப்பட்டால் நிலத்தின் சிட்டா, உரிமையாளரின் ஆதார் நகல், ஒரு புகைப்படம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

அதேபோல், பள்ளிகள், கல்லூரிகள் போன்றவற்றில் நாற்றுகள் நடவு செய்ய விரும்பினால் அந்த இடத்தின் சிட்டா, கல்வி நிறுவனங்களின் லெட்டர் பேடில் கோரிக்கை கடிதம், உரிமையாளர் புகைப்படம் போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

தன்னார்வலர்கள் என்றால் பொது இடங்களில் நடவு செய்ய வேண்டுமென்றால் ஊராட்சி, பேரூராட்சி பகுதிகள் ஊராட்சி தலைவர்கள் அல்லது பேரூராட்சி தலைவர்களின் கடிதம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். மேலும் தொடர்புக்கு கோவை வனவியல் விரிவாக்க கோட்டம் 9791661116 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Tags:    

Similar News