உள்ளூர் செய்திகள்

பயிற்சி தொடங்கியது... மாமல்லபுரம் வந்து சிலை செதுக்கும் வெளிநாட்டவர்கள்

Published On 2023-01-25 19:00 IST   |   Update On 2023-01-25 19:00:00 IST
  • கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் எஸ்.ஆர் காந்தி பயிற்சி கூடத்தை திறந்து வைத்தார்
  • இந்தியாவில் 3 இடங்களில் இதுபோன்ற பயிற்சி நடத்தப்படுகிறது.

மாமல்லபுரம்:

மாமல்லபுரம் "படைப்பு சிற்பிகள்" சிற்பக் கலைக்கூடத்தில் இன்று பல்வேறு நாடுகளை சேர்ந்த, 15 வெளிநாட்டு கலைஞர்களுக்கு சிலை செதுக்கும் பயிற்சி துவங்கியது. தமிழ்நாடு கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் எஸ்.ஆர் காந்தி பயிற்சி கூடத்தை திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். மார்ச் மாதம் வரை இந்த பயிற்சி நடைபெறுகிறது.

கடந்த 14 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த பயிற்சி கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடு காரணமாக பயிற்சி நடக்கவில்லை. இந்தியாவில் 3 இடங்களில் இதுபோன்ற பயிற்சி நடத்தப்படுகிறது. அதில் ஒன்று மாமல்லபுரம். இதனால் இங்குள்ள சிற்பிகளுக்கு பெருமையாக உள்ளது என பயிற்சியாளர் சிற்பி பாஸ்கர் தெரிவித்தார். வந்திருந்த வெளிநாட்டினர் ஆர்வத்துடன் அவரவர் கிரியேட்டிவ் சிலைகளை செதுக்கினார்கள்.

Tags:    

Similar News