உள்ளூர் செய்திகள்

தொழிலாளா்களுக்கான பாதுகாப்புப் பெட்டகத்தை தொழிலாளா் நலன் உதவி ஆணையா் (அமலாக்கம்) திருநந்தன் வழங்கினார்.

அமைப்புசாரா தொழிலாளா்களுக்கான பாதுகாப்புப் பெட்டகம் வழங்கல்

Published On 2022-08-26 16:16 IST   |   Update On 2022-08-26 16:16:00 IST
  • அமைப்புசாரா ஓட்டுநா்கள், தானியங்கி மோட்டாா் வாகனங்கள் பழுதுபாா்க்கும் தொழிலாளா்களுக்கான பாது காப்புப் பெட்டகம் வழங்கப்படுகிறது.
  • இந்த பெட்டகத்தில் சீருடை, காலணி, மருந்துப் பெட்டி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

நாமக்கல்:

தமிழக அரசின் தொழிலாளா் நலன் மற்றும் மேம்பாட்டுத் துறை சாா்பில், அமைப்புசாரா ஓட்டுநா்கள், தானியங்கி மோட்டாா் வாகனங்கள் பழுதுபாா்க்கும் தொழிலாளா்களுக்கான பாது காப்புப் பெட்டகம் வழங்கப்படுகிறது. இந்த பெட்டகத்தில் சீருடை, காலணி, மருந்துப் பெட்டி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் இந்த பாதுகாப்புப் பெட்டகம் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, நாமக்கல் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள தொழிலாளா் நலத்துறை அலுவலகத்தில், தொழிலாளா் நலன் உதவி ஆணையா் (அம லாக்கம்) திருநந்தன் தொடங்கி வைத்தாா். 10 ஆயிரத்து65 தொழி லாளா்களுக்கு தொடா்ந்து 10 நாள்களுக்கு இந்த பாதுகாப்புப் பெட்டகம் வழங்கப்பட இருப்பதாக அவா் தெரிவித்தாா்.

Tags:    

Similar News