ஓசூரில் அமைப்புசாரா கட்டுமான தொழிலாளர்களுக்கு ஆன்லைன் மூலம் பெறப்பட்ட ஓய்வூதிய ஆணை வழங்கும் நிகழ்ச்சி
- ஆன்லைன் மூலமாக பெறப்பட்டு, தொழிலாளர் களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- தொழிலாளர் களுக்கு ஓய்வூதிய ஆணையை வழங்கினார்.
ஓசூர்,
தமிழக அமைப்புசாரா உடல் உழைப்பு தொழிலாளர் மாநில சங்கத்தின் சார்பில், அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர் களுக்கு,தமிழக அரசு வழங்கும் ஓய்வூதியத்திற்கான ஆணை ஆன்லைன் மூலமாக பெறப்பட்டு, தொழிலாளர் களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஒசூர் காமராஜர் காலனியில் உள்ள சங்க அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, தமிழக அமைப்புசாரா உடல் உழைப்பு தொழிலாளர் நலவாரியங்களின் மாநில ஆலோசனைக்குழு உறுப்பினரும்,தொழிற்சங்க மாநிலத்தலைவருமான வக்கீல் இளஞ்சூரியன் கலந்து கொண்டு, தொழிலாளர் களுக்கு ஓய்வூதிய ஆணையை வழங்கினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில், விசைத்தறிப்பிரிவு மாவட்ட செயலாளர் குணசேகரன், மாவட்ட அமைப்புசாரா பிரிவு செயலாளர் மனோகரன், மாவட்ட மகளிரணி தலைவி சத்யா, மாநில சட்ட பாதுகாப்பு குழு துணைத்தலைவி வக்கீல் வனதாட்சி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, அலுவலக நிர்வாகிகள் வினோதினி, ரக்க்ஷன் ஆகியோர் செய்து இருந்தனர்.