உள்ளூர் செய்திகள்

கபிலர்மலை வட்டார விவசாயிகளுக்கு வடகிழக்கு பருவமழை காலத்துக்கு ஏற்ற நெல் ரகங்கள் குறித்த விழிப்புணர்வு

Published On 2022-09-26 14:57 IST   |   Update On 2022-09-26 14:57:00 IST
  • வடகிழக்கு பருவமழை காலம் துவங்க இருப்பதால் கபிலர்மலை வட்டார விவசாயிகள் நெல் ரகங்களை பயிரிட்டு பலன் அடையலாம்.
  • மேலும் விபரங்களுக்கு கபிலர்மலை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தினையோ அணுகி விவசாயிகள் பயன்பெறலாம்.

பரமத்திவேலூர்:

கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

வடகிழக்கு பருவமழை காலம் துவங்க இருப்பதால் கபிலர்மலை வட்டார விவசாயிகள் ஏடிடி 38, ஏடிடி 39, ஏடிடி 46, கோ 50, கோ 52, டிகேஎம்13, மேம்படுத்தப்பட்ட வெள்ளை பொன்னி, டிஆர்ஒய் 3 போன்ற நெல் ரகங்களை பயிரிட்டு பலன் அடையலாம். மேலும் விபரங்களுக்கு அந்தந்த பகுதி உதவி வேளாண்மை அலுவலர் களையோ அல்லது கபிலர்மலை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தினையோ அணுகி விவசாயிகள் பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News