பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி முதல்வர் சார்பாக சான்றிதழ் வழங்கப்பட்டது
வேப்பனப்பள்ளி கிராம சிறுவர்களுக்கு கோடை கால விளையாட்டு பயிற்சி
- சிறுவர்களுக்கு கோடை கால விளையாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
- வாலிபால், கால்பந்து போன்ற விளையாட்டு பயிற்சிகள் இலவசமாக அளிக்கப்பட்டது.
வேப்பனப்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் உள்ள வேளங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கிராம புற சிறுவர்களுக்கு உடற்கல்வி, விளையாட்டு, உடற்பயிச்சியை ஊக்குவிக்கும் விதமாக சிறப்பு கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம நடைபெற்றது.
இந்த முகாமில் வேப்பனப்பள்ளி, தீத்தம், நாச்சிகுப்பம், சிந்தகாம்பள்ளி, கொங்கனப்பள்ளி, நெடுசாலை, மகாராஜகடை, மாதேப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 150-க்கும் மேற்பட்ட 10 வயது முதல் 20 வரையிலான சிறுவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
இவர்களுக்கு உடற்கல்வி ஆசிரியர் வினோத்குமார் தலைமையில் உடற்கல்வி, உடற்பயிச்சி, கிரிக்கெட் பயிற்சி,கபடி பயிற்சி, வாலிபால், கால்பந்து போன்ற விளையாட்டு பயிற்சிகள் இலவசமாக அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சி மூலம் கிராமப்புற மக்களுக்கு விளையாட்டு மற்றும் உடற்கல்வி மூலம் ஊக்குவித்து பயிற்சிகளை அளித்து விளையாட்டுத் துறைகளில் ஈடுபடுத்தவும் மேலும் விளையாட்டு ஆர்வத்தை அதிகரித்து வேப்பனப்பள்ளி பகுதியி லிருந்து விளையாட்டுத் துறைகளில் சிறுவர்களை ஈடுபடுத்தவும் பயிற்சிகள் வழங்கப்படுவதாகவும் உடற்கல்வி ஆசிரியர் வினோத்குமார் தெரி வித்தார்.
இதைத் தொடர்ந்து இப்குதியில் இலவசமாக பயிற்சி பெற்ற மாணவர்க ளுக்கு பள்ளி முதல்வர் சார்பாக சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இந்த நிலையை உடற்கல்வி பயிற்சியில் 150-க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு பயிற்சியை முடித்தனர்.