உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்குவது குறித்து சமையலர்களுக்கு பயிற்சி அளித்த காட்சி.

சூளகிரி அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்குவது குறித்து சமையலர்களுக்கு பயிற்சி

Published On 2022-08-29 14:39 IST   |   Update On 2022-08-29 14:39:00 IST
  • சூளகிரி ஒன்றியத்தில் 133 அரசு ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிகளில் இத்திட்டம் செயல்பட உள்ளது.
  • முதற்கட்டமாக சூளகிரியில் பிரிவு 2 , பேரிகையில் பிரிவு 1 என பயிற்சி நடைபெற்றது.

சூளகிரி,

தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் 17 ஒன்றியங்களில் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியத்தில் 133 அரசு ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிகளில் இத்திட்டம் செயல்பட உள்ளது.

இதில் ஒரு பள்ளி கூடத்திற்கு ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு பி.எல்.எப். மூலம் 3 சுய உதவி குழு உறுப்பினர்கள் வீதம் மொத்தம் 399 உறுப்பினர்களுக்கு 2 நாட்கள் சமையல் பயிற்சி வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக சூளகிரியில் பிரிவு 2 , பேரிகையில் பிரிவு 1 என பயிற்சி நடைபெற்றது.

இந்த பயிற்சிக்கு திட்ட இயக்குனர் ஈஸ்வரன் தலைமையில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம் உதவிதிட்ட அலுவலர் பிரபாகரன்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோபாலகிருஷ்ணன், சிவகுமார், உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜேஸ்குமார், வட்டார மேலாளர் எல்லப்பா மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்.

Tags:    

Similar News