மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை- அரசு பஸ் நடத்துனர் கைது
- சம்பவத் தன்று பெண் வீட்டில் தனியாக இருந்தார்.
- குடி போதையில் பொன்ரங்கன், மனநலம் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த திருவனப்பட்டி ஊராட்சி பெரியகாமாட்சி பட்டி கிராமத்தை சேர்ந்தவர் 35 வயது மனநலம் பாதிக்கப் பட்ட பெண். இவர் சம்பவத் தன்று வீட்டில் தனியாக இருந்தார்.
அதே பகுதியை சேர்ந்தவர் பொன்ரங்கன் (வயது47). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றி பணி நீக்கம் செய்யப்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் குடி போதையில் பொன்ரங்கன், மனநலம் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் அந்த பெண் கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பொன்ரங்கனை கையும் களவுமாக பிடித்து தர்ம அடி கொடுத்து பின்னர் அவரை கல்லாவி போலீசில் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பொன்ரங்கனை கைது செய்து கிருஷ்ணகிரி சிறையில் அடைத்தனர்.