வெற்றி பெற்ற அணியினருக்கு பள்ளியின் இயக்குநர் இசக்கித்துரை பரிசு கோப்பை வழங்கிய போது எடுத்த படம்.
இசக்கி வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.சி. பள்ளியில் ஜவர் கால்பந்தாட்ட போட்டி
- இசக்கி வித்யாஷ்ரம் பள்ளியில் தென்காசி மாவட்ட அளவிலான ஜவர் கால்பந்தாட்ட போட்டி நடைப்பெற்றது.
- போட்டியில் மொத்தம் 25 அணியினர் கலந்து கொண்டனர்.
தென்காசி:
இசக்கி வித்யாஷ்ரம் பள்ளியில் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு தென்காசி மாவட்ட அளவிலான ஜவர் கால்பந்தாட்ட போட்டி நடைப்பெற்றது. இதில் மொத்தம் 25 அணியினர் கலந்து கொண்டனர்.
இசக்கி வித்யாஷ்ரம் பள்ளியின் இயக்குநரும், தென்காசி நகரின் கால்பந்தாட்ட தலைவருமான இசக்கித்துரை முன்னிலை வகித்தார். போட்டியில் முதல் பரிசை ஆலங்குளம் மரடோனா அணியினரும், 2-வது பரிசை ஆறுமுகம்பட்டி அணியினரும், 3-வது பரிசை தென்காசி புட்பால் கிளப் மற்றும் ரெட்டியார்பட்டி சிவந்தி ஆதித்தனார் அணியினரும் பெற்றனர். வெற்றி பெற்ற அணியினருக்கு பள்ளி முதல்வர் மோனிகா டீ சோசா மற்றும் தென்காசி கால்பந்தாட்ட செயலாளர் பிஸ்வாஸ் ஆகியோர் வழங்கினர்.
ஏற்பாடுகளை பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்கள் பாலமுருகன், ஸ்டீபன் தங்கராஜ், ரவிஅருண், சோபியா, மகாலெட்சுமி, வைஷ்ணவி ஆகியோர் செய்திருந்தனர்.