உள்ளூர் செய்திகள்

சந்திப்பு பூ மார்க்கெட்டில் விற்பனை நடைபெற்ற காட்சி.

நெல்லையில் பூக்கள் விலை உயர்வு- பிச்சிப்பூ கிலோ ரூ.1,000-க்கு விற்பனை

Published On 2023-04-13 09:11 GMT   |   Update On 2023-04-13 09:11 GMT
  • நெல்லை, தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நெல்லை சந்திப்பு பூ மார்க்கெட்டிற்கு பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
  • முகூர்த்த நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பூக்களின் விற்பனையும், அதன் விலையும் அதிகரித்து காணப்படும்.

நெல்லை:

நெல்லை, தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நெல்லை சந்திப்பு பூ மார்க்கெட்டிற்கு பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

பண்டிகை நாட்கள்

இங்கு முகூர்த்த நாட்கள் மற்றும் பண்டிகை நாட்க ளில் பூக்களின் விற்பனையும், அதன் விலையும் அதிகரித்து காணப்படும்.

இந்நிலையில் நாளை(வெள்ளிக்கிழமை) தமிழ் புத்தாண்டு கொண்டா டப்படுகிறது. இதையொட்டி பூக்கள் வாங்க இன்று வியாபாரி களும், பொதுமக்களும் சந்திப்பு பூ மார்க்கெட்டில் திரண்டனர். இதனால் விலையும் அதிகரித்திருந்தது. நேற்று ரூ. 700-க்கு விற்கப்பட்ட பிச்சிப்பூ இன்று ரூ. 300 உயர்ந்து ரூ. 1,000-க்கு விற்கப்பட்டது.

ரோஜா

இதேப்போல் நேற்று ரூ. 500-க்கு விற்கப்பட்ட மல்லிப்பூ ரூ. 200 உயர்ந்து ரூ. 700-க்கு விற்கப்பட்டது. அரளிப்பூ ரூ. 300-க்கும், சம்பங்கி ரூ. 200-க்கும், ரோஜா பூ 1 கட்டு ரூ. 150-க்கும், கேந்திப்பூ ரூ. 30-க்கும் விற்கப்பட்டது.

தற்போது பூக்கள் விளைச்சல் அதிகளவில் உள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் இருந்து விற்பனைக்காக பூக்கள் வந்துள்ளது. எனவே இன்று பூக்களின் விலை சிறிது அளவே உயர்ந்துள்ளது. எனினும் தேவை அதிகரித்து இருந்ததால் வியாபாரிகளும், பொதுமக்களும் போட்டி போட்டு பூக்களை வாங்கி சென்றனர்.

Tags:    

Similar News