உள்ளூர் செய்திகள்

போலீசாரின் கொடி அணிவிப்பு பேரணி நடைபெற்ற போது எடுத்த படம்.

பரமத்தி வேலூரில் காவல் துறை சார்பில் கொடி அணிவகுப்பு

Published On 2022-09-01 15:55 IST   |   Update On 2022-09-01 15:55:00 IST
  • காவிரி ஆற்றில் இரவு சுமார் 7 மணி அளவில் விநாயகர் சிலையை கரைக்க உள்ளனர்.
  • சப்- இன்ஸ்பெக்டர்கள், போலீசார் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் உட்கோட்டத்தில் உள்ள பரமத்தி, ஜேடர்பாளையம், பரமத்தி வேலூர், நல்லூர், வேலகவுண்டன்பட்டி ஆகிய5 காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதி களில் நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சுமார் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்து முன்னணியினர் மற்றும் பொதுமக்கள் சார்பாக விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன.

அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் நாளை(வெள்ளிக்கிழமை) சிலைகளை ஆங்காங்கே உள்ள காவேரி ஆற்றில் கரைக்கின்றனர்.

அதேபோல் பரமத்தி வேலூர் உட்கோட்டத்தில் உள்ள 5 காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட சிலைகள் வருகிற 4-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை சுமார் 3 மணி அளவில் அனைத்து சிலைகளும் ஊர்வலமாக கொண்டு வந்து பரமத்தி வேலூர் போக்குவரத்து போலீஸ் நிலையம் எதிரே சாலையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்படும்.

பின்னர் விநாயகர் சிலையை முக்கிய வீதிகள் வழியாக ஊர்வல மாக எடுத்துச் சென்று பரமத்தி வேலூர் காசி விஸ்வநாதர் ஆலயம் அருகில் உள்ள காவிரி ஆற்றில் இரவு சுமார் 7 மணி அளவில் விநாயகர் சிலையை கரைக்க உள்ளனர்.இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பரமத்தி வேலூர் காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.பேரணியை பரமத்தி வேலூர் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன் பச்சை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.ஊர்வலம் பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவர்க ளுக்கு நம்பிக்கை அளிக்கும் வகை யில் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடந்தது. பேரணி வேலூர் போலீஸ் நிலையம் முன்பு இருந்து தொடங்கி அண்ணா சாலை, திருவள்ளுவர் சாலை,பழைய பை- பாஸ், பள்ளி சாலை வழியாக சென்று மீண்டும் போலீஸ் நிலையம் முன்பு நிறைவடைந்தது.

இதில் பரமத்திவேலூர், பரமத்தி,ஜேடர்பாளையம், நல்லூர் மற்றும் வேலக வுண்டம்பட்டி உள்ளிட்ட காவல் நிலையங்களைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள் வீரம்மாள் ,சுரேஷ், ரவிச்சந்தி ரன், சப்- இன்ஸ்பெக்டர்கள், போலீசார் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News