உள்ளூர் செய்திகள்

பிடித்து வரப்பட்ட மீன்கள்

போதிய அளவு மீன்கள் கிடைக்காததால் மீனவர்கள் ஏமாற்றம்

Published On 2022-06-18 09:14 GMT   |   Update On 2022-06-18 09:14 GMT
  • விசைப்படகுகளில் பிடித்து வரப்பட்ட மீன்களை வாங்குவதற்கு நாகை துறைமுகத்தில் ஆயிரக்கணக்கான மீன் வியாபாரிகள் திரண்டனர்.
  • 5 லட்சம் வரை டீசல் உள்ளிட்ட செலவு செய்து கடலுக்கு சென்ற தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக மீனவர்கள் வேதனை தெரிவித்தனர்.

நாகப்பட்டினம்:

தமிழகத்தில் 61 நாட்கள் மீன்பிடி தடை காலம் முடிந்து கடந்த 14ம் தேதி நள்ளிரவு கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்கள் இன்று அதிகாலை கரை திரும்பினர். பெருத்த எதிர்பார்ப்புடன் சென்ற மீனவர்களுக்கு போதிய அளவு மீன்கள் கிடைக்காததால், ஏமாற்றத்துடன் கரை திரும்பியுள்ளனர்.

ஏராளமான விசைப்படகுகளில் பிடித்து வரப்பட்ட மீன்களை வாங்குவதற்கு நாகை துறைமுகத்தில் காலை முதல் ஆயிரக்கணக்கான மீன் வியாபாரிகளும், மீன் பிரியர்களும் திரண்டனர். வழக்கமாக அதிகமாக கிடைக்ககூடிய வாவல், வஞ்சரம், பாறை உள்ளிட்ட மீன்கள் குறைந்த அளவிலேயே கிடைத்ததாகவும், மீன்களின் விலை கடும் வீழ்ச்சி அடைந்து இருப்பதாகவும் மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக 700 ரூபாய்க்கு விற்பனையான நண்டு மற்றும் இறால் 600 ரூபாய்க்கு விற்பனையாவதாகவும், 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வஞ்சரம், வாவள் 600 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. ஒருகிலோ 400 ரூபாய்க்கு விற்பனையான பாறை மீன் 200 ரூபாய்க்கும், 350 ரூபாய்க்கு விற்பனையான விலை மீன்கள் 250 ரூபாய்க்கும், கிலோ 400 ரூபாய்க்கு விற்பனையான கனவா 340 ரூபாய்க்கும், நாகை துறைமுகத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

2 லட்சம் முதல் 5 லட்சம் வரை டீசல் உள்ளிட்ட செலவு செய்து கடலுக்கு சென்ற தங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாகவும், பிடித்து வரப்பட்ட மீன்கள் செலவினங்களை ஈடுகட்டவே சரியாக இருக்கும் என வேதனை தெரிவித்தனர்.

Tags:    

Similar News